நடிகர் கமலஹாசன் மீது பெங்களூரு போலீசில் புகார்
26 மார்,2017 - 14:39 IST
மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நடிகர் கமலஹாசன் மீது, கடந்த சில நாட்களாக தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகி்ன்றன. இந்நிலையில் இன்று (மார்ச் 26) பெங்களூரு போலீஸ் ஸ்டேஷனில் கமல் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் டிவி ஒன்றிற்கு கமல் அளித்த பேட்டியின் போது, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை உதாரணம் காட்டி விளக்கமளித்தார். இதனால், இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை அவமதிக்கும் வகையில் கமல் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக கும்பகோணம் மற்றும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டுகளில் கமல் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பிரதானந்தா என்ற சாமியார் பெங்களூரு போலீஸ் ஸ்டேஷனில் இன்று புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு குறித்து கமலிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment