Saturday, March 25, 2017

'கடுகு'-க்கு திரையுலகினர் பாராட்டு









'கடுகு'-க்கு திரையுலகினர் பாராட்டு



25 மார்,2017 - 22:05 IST






எழுத்தின் அளவு:








கோலிவுட்டில் நேற்று ஒரே நாளில் 9 திரைப்படங்கள் வௌியாகின. இது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதா, இல்லையா என்று ஒரு பக்கம் விவாதம் நடந்து கொண்டிருந்தாலும் நேற்று வௌியான படங்களில் கடுகு, எங்கிட்ட மோதாதே படங்கள் தான் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிலும் விஜய் மில்டன் இயக்கத்தில், ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா உள்ளிட்ட பலரது நடிப்பில் வௌியான இப்படத்திற்கு விமர்சகர்களால் பாராட்டு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, படத்தில் ஒரு நல்ல மெசேஜ்ஜூம் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் பாராட்டு பெற்றுள்ளது. கடுகு படத்தை இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட பல திரையுலகினரும் பாராட்டியுள்ளனர். இந்தாண்டின் கனமான பதிவாக கடுகு படம் இருக்கும் என்றும், ராஜகுமாரனின் யதார்த்த நடிப்பு சிறப்பாக இருப்பதாக திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். கூடவே இப்படியொரு படத்தை கொடுத்த விஜய் மில்டனையும் பாராட்டியுள்ளனர்.




Advertisement








பெயரைப் போலவே ரிசல்ட்டும், 'எங்கிட்ட மோதாதே'பெயரைப் போலவே ரிசல்ட்டும், ... ஷாருக்கான், ஜூகி சாவ்லாவுக்கு அமலாக்க துறை நோட்டீஸ் ஷாருக்கான், ஜூகி சாவ்லாவுக்கு ...










0 comments:

Post a Comment