இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற டாப்ஸி பேசும்போது….
‘‘இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் பெண் உளவாளியாக நடிக்கிறேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். `டோனி’ படத்தை இயக்கிய நீரஜ்பாண்டே இந்த கதையை எழுதி தயாரித்திருக்கிறார். இது நான் இந்தியில் நடிக்கும் 6-வது படம். தமிழிலும் இந்த படம் ‘நான்தான் ஷபானா’ என்ற பெயரில் வருவது மகிழ்ச்சி.
இந்த படத்தில் அக்ஷய் குமார் கவுரவ வேடத்தில் வருகிறார். உளவாளி வேடத்துக்காக ஒரு வருடம் பயிற்சி எடுத்தேன். 4 சண்டைகாட்சிகள் வருகின்றன. இதற்காக ஜப்பானிய மார்ஷல் ஆர்ட்ஸ் படித்தேன். ஹார்மகா, ஜப்பான், ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளையும் கற்றேன். அனைத்து சண்டை காட்சியிலும் டூப்போடாமல் உயிரை பணயம் வைத்து நடித்தேன். சண்டை காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். இந்த படத்தை பார்க்கும் பெண்களுக்கு தற்காப்புகலை கற்கும் ஆர்வம் வரும்.
‘ஆடுகளம்’, ‘காஞ்சனா-2’ படம் பற்றி இப்போதும் பேசுகிறார்கள். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கால்ஷீட் உடனே கொடுக்க முடியாததால் அது நடக்கவில்லை. இனி வருடத்துக்கு ஒரு தமிழ் படத்திலாவது நடிக்க விரும்புகிறேன்.
பிரபல மலையாள ஹீரோ பிரித்விராஜ் இதில் வில்லனாக நடித்திருக்கிறார். இது என் திரையுலக வாழ்வில் முக்கியமான பலம்’’ என்றார்.
0 comments:
Post a Comment