அமீர்கானுடன் மோத விரும்பவில்லை: சஞ்சய் தத்
25 மார்,2017 - 16:35 IST
பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவர். சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய், ஓமங் குமார் இயக்கத்தில் ‛பூமி' என்ற படத்தில் நடித்ஸ்ரீது வருகிறார். பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் தயாரிக்கிறார்கள். பூமி படம் ஆகஸ்ட் 4-ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் தற்போது தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கிறார் சஞ்சய் தத். அன்றைய தினம் தான் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‛சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' படமும் ரிலீஸாகிறது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸானால் வசூல் பாதிக்கும் என்பதால் தன் படத்தை தள்ளி வைத்துள்ளார் சஞ்சய்.
இதைப்பற்றி சஞ்சய் தத் கூறியதாவது.... "ஒவ்வொரு படமும் கடின உழைப்புக்கு பிறகு தான் உருவாகிறது. அப்படி உருவாகும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதி கொள்வது நல்லதல்ல, படத்திற்கு பெயரும் கிடைக்காது, வசூலும் சிறப்பாக இருக்காது. அமீர் எனது நெருங்கிய நண்பர். அவர் நடிப்பில் வெளியாகும் படத்துடன் எனது படத்தையும் ரிலீஸ் செய்து அவருடன் மோத விரும்பவில்லை. இந்த சினிமா துறையில் ஒருவருக்கொருவர் உதவியாக தான் இருக்க வேண்டும்" என்கிறார்.
‛பூமி' படத்தின் ரிலீஸை தள்ளிவைக்கும்படி தயாரிப்பாளர்கள் பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங்கிடம் பேசியிருக்கிறார் சஞ்சய். அதன்படி அவர்கள் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிடுவார்கள் என தெரிகிறது.
0 comments:
Post a Comment