நான் கோவை சரளாவின் தீவிர ரசிகன் - யோகி பாபு
30 மார்,2017 - 10:57 IST
செம, சைத்தான் கா பச்சா, சத்ரியன், சத்யா, சரவணன் இருக்க பயமேன் என பல படங்களில் காமெடியனாக நடித்து வருபவர் யோகி பாபு. இந்த படங்களில் செம படத்தில் காமெடி மட்டுமின்றி குணசித்ரம் கலந்த வேடத்திலும் நடித்திருப்பதாக சொல்லும் யோகிபாபுவுக்கு கதையின் நாயகனாக நடிக்க 3 படவாய்ப்புகள் வந்ததாம். ஆனால், காமெடியில் பிசியாக போய்க்கொண்டிருக்கும்போது கதையின் நாயகன் என்கிற விஷப்பரீட்சையில் இறங்கி இருக்கிற மார்க்கெட்டை கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விட்டதாக சொல்லும் யோகிபாபு, காமெடியனாக நடித்து நிலைத்து நின்றால் போதும் என நினைக்கிறேன் என்கிறார்
அவரிடத்தில், தமிழில் பிடித்த ஹீரோயின்கள் பற்றி கேட்டபோது, திரிஷா, நயன்தாரா இருவருமே எனக்கு பிடித்தமான நடிகைகள். நயன்தாராவுடன் இதுவரை நடித்ததில்லை. ஆனால் அவரது போல்டான கேரக்டர் பிடிக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். நயன்தாரா நடித்த படங்களில் ராஜா ராணி எனக்கு ரொம்ப பிடித்த படம்.
திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்துள்ளேன். அப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோது 15 நாட்கள் அவருடன் நடித்தேன். அப்போது எளிமையாக யதார்த்தமாக கேசுவலாக பழகினார். ஒரு முன்னணி நடிகை என்கிற பந்தா அவரிடம் துளியும் இல்லை. அது அவரிடம் மிகவும் பிடித்த விசயம்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பு நான் கோவை சரளாவின் தீவிரமான ரசிகன். மனோரமா ஆச்சிக்கு பிறகு கோவை சரளா அக்கா மாதிரி பர்பாமென்ஸ் பண்ண எனக்கு தெரிந்து வேறு யாருமே இல்லை. கமல் சாருக்கு இணையாக சதிலீலாவதியில் நடித்தவர். காமெடி, கமர்சியல் எல்லா வகையான நடிப்பிலும் புகுந்து விளையாடுவார். அவருடன் இப்போது செம படத்தில் நடித்துள்ளேன். இன்னொரு படத்திலும் நடிக்கப்போகிறேன். சீனியாரிட்டி என்பதை கோவை சரளா அக்கா பார்க்க மாட்டார். ஸ்பாட்டில் இறங்கினதும் சிரிக்க ஆரம்பித்து விடுவார். எப்போதும் கலகலப்பாக ஜாலியாக இருப்பார். ஆக, நயன்தாரா, திரிஷாவுக்கு முன்பே நான் கோவை சரளாவின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்கிறார் யோகிபாபு.
0 comments:
Post a Comment