நீங்கள் லெஸ்பியனா? சிம்பு உருவில் நீதுசந்திராவிடம் கேட்ட ரசிகர்!!
28 மார்,2017 - 09:36 IST
சமீபகாலமாக சமூகவலைதளங்கள் மூலம் பல பிரபல நடிகர் நடிகைகள் ரசிகர்களிடம் நேரடி தொடர்பில் உள்ளனர். அவ்வப்போது தங்களது அதிரடி புகைப்படங்களை பதிவிறக்கம் செய்பவர்கள், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்கள். அந்தவகையில், வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நீதுசந்திராவும், அந்த படத்தில் தனது நடிப்பு குறித்து ரசிகர்களிடம் கேட்டறிய டுவிட்டரில் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
அப்போது அவரது நடிப்பு குறித்து சிலர் பாசிட்டீவான கருத்து கூறிவந்த நிலை யில், தனது டுவிட்டரில் சிம்புவின் புகைப்படத்தை வைத்திருந்த ஒரு ரசிகர், நீங்கள் லெஸ்பியனா? என்று நீதுசந்திராவிடம் கேட்டுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த அவர், நீங்கள் சிம்புவா? என்று அந்த ரசிகரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதைப்பார்த்து, சிம்பு ரசிகர்கள் நீதுசந்திராவிடம் சண்டை பிடித்துள்ளனர். இந்த சண்டைக்குப்பிறகு, சிம்பு எனது நல்ல நண்பர். என்னிடம் கேள்வி கேட்ட நபரின் டுவிட்டர் பக்கத்தில் சிம்புவின் படம் இடம்பெற்றிருந்ததினால்தான் அப்படி கேட்டு விட்டேன் என்று பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் நீதுசந்திரா.
0 comments:
Post a Comment