'ஒடியன்' படத்தில் பிளாக் மேஜிசியனாக மோகன்லால்
30 மார்,2017 - 16:47 IST
கடந்த சில நாட்களுக்கு முன் தனது அடுத்த படமான 'ஒடியன்' பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார் மோகன்லால். மோகன்லாலின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை, விளம்பரப்படங்களை இயக்கிய ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இயக்கவுள்ளார். மோகன்லாலின் 38 வருட திரையுலகில் அவர் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை கொண்டதாக இப்படம் இருக்கும் என கூறியிருந்தார் இயக்குனர் ஸ்ரீகுமார். தற்போது அந்த கேரக்டர் பற்றிய இன்னும் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்
ஒடியன் என்றால் மந்திர தந்திரங்கள் அறிந்தவன் என அர்த்தமாம். கேரளாவில் உருவான முதல் கூலிப்படை என்றால் அது ஒடியன்கள் தானாம். தங்களது எதிரிகளை சமாளிப்பதற்காக அவர்கள் சில மந்திர தந்திரங்களை பயன்படுத்துவார்களாம். குறிப்பாக எதிரிகளை அழிப்பதற்காக இரவு நேரங்களில் கிளம்பும் இவர்கள் தங்களை வெவ்வேறு விதமான விலங்குகளாக உருமாற்றிக்கொள்ளவும் செய்வார்களாம். இப்படிப்பட்ட ஒரு பிளாக் மேஜிசியனாகத்தான் இந்தப்படத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment