தமிழ் ஹீரோயினாக அறிமுகமாகும் பேட்மிட்டன் வீராங்கனை
26 மார்,2017 - 14:06 IST
தேசிய பேட்மிட்டன் வீராங்கனை ரியா, இவர் போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மாநில பேட்மிட்டன் வீரர் கிஷோர் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ரீராம்ஜி இசை அமைக்கிறார் இவரும் பேட்மிட்டன் வீரர்தான். பேட்மிட்டன் பயிற்சியாளர் ராஜபல்லவி ராஜா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
கபடி, கிரிக்கெட், குத்துச்சண்டை உள்ளிட்ட பல விளையாட்டுகள் பற்றி படம் வந்துவிட்டது. பேட்மிட்டன் விளையாட்டு பற்றி படம் வரவில்லை.
அதனால் பேட்மிட்டன் வீரர்களாக சேர்ந்து இந்தப் படத்தை உருவாக்குகிறோம். கிராமத்தில் கிரிக்கெட் விளையாட போதிய இடம் இல்லாததால் குறைந்த இடமே தேவைப்படும் பேட்மிட்டன் விளையாட்டை தேர்வு செய்கிறார்கள். அந்த கிராமத்து இளைஞர்கள் தங்கள் திறமையால் உலக அளவிற்கு உயர்வதுதான் கதை. அப்படி அவர்கள் உயர்வதற்கு எது தடையாக இருக்கிறது. அவற்றை அவர்கள் எப்படி உடைத்து முன்னேறுகிறார்கள் என்பதுதான் திரைக்கதை என்கிறார் இயக்குனர் ராஜபல்லவி ராஜா.
0 comments:
Post a Comment