Wednesday, March 29, 2017

பிரியங்கா - தீபிகா பொறுத்தமாக இருப்பார்கள்: ஆஷா பரேக்


பிரியங்கா - தீபிகா பொறுத்தமாக இருப்பார்கள்: ஆஷா பரேக்



29 மார்,2017 - 14:24 IST






எழுத்தின் அளவு:








1960-70களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஆஷா பரேக். கடைசியாக 1999-ம் ஆண்டு சர் ஆன்கோன் பர் என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். அவ்வப்போது நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஷாவிடன், உங்களின் வாழ்க்கை படம் உருவானால் அதில் யார் உங்களது வேடத்திற்கு பொறுத்தமாக இருப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆஷா, எனது வேடத்திற்கு பிரியங்கா சோப்ரா பொறுத்தமாக இருப்பார், அவரிடத்தில் கொஞ்சம் குறும்புதனம் உள்ளது. அதேப்போன்று தீபிகாவையும் நடிக்க வைக்கலாம், அவரும் சரியாக இருப்பார். அதேசமயம் எனது வாழ்க்கை சினிமாவாக உருவானால் அதை சஞ்யச் லீலா பன்சாலி தான் படமாக இயக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆஷா பரேக்கின் வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி, அதை புத்தமாக எழுதியுள்ளார் கலித் முகமது. இப்புத்தக வெளியீட்டு விழா வருகிற ஏப்., 10-ம் தேதி மும்பையில் நடைபெற இருக்கிறது. நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட இருக்கிறார்.


0 comments:

Post a Comment