Saturday, March 25, 2017

முதல் நாளில் ரூ.4.02 கோடி வசூலித்த ‛பில்வுரி'


முதல் நாளில் ரூ.4.02 கோடி வசூலித்த ‛பில்வுரி'



25 மார்,2017 - 16:57 IST






எழுத்தின் அளவு:








என்.ஹெச்-10 படத்தை தொடர்ந்து அனுஷ்கா, தயாரித்து, நடித்து வெளியாகியுள்ள படம் ‛பில்வுரி'. ரொமான்ட்டிக் காமெடியுடன், ஒரு பேயையும் மையமாக வைத்து இப்படம் வெளிவந்துள்ளது. அனுஷ்கா உடன் தில்ஜித், சுராஜ் சர்மா, மெஹ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அன்சாய் லால் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனம் வந்துள்ள போதிலும் படத்தின் முதல்நாள் வசூல் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கிறது என்று விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. படம் வெளியான முதல்நாளான நேற்று ரூ.4.02 கோடி வசூலித்திருக்கிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் படத்தின் வசூலும் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள். படத்தின் புரொமோஷன் தான் வசூலுக்கு உதவியாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.


0 comments:

Post a Comment