Tuesday, March 28, 2017

புதிய கெட்-அப்பில் சித்ரா லட்சுமணன்


புதிய கெட்-அப்பில் சித்ரா லட்சுமணன்



28 மார்,2017 - 11:29 IST






எழுத்தின் அளவு:








தயாரிப்பாளரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் அவர் கெட்-அப் மாற்றி நடிப்பதில்லை, இயல்பான தோற்றத்திலேயே நடிப்பார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்த சித்ரா லட்சுமணன், அந்தப் படத்தை தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “யங் மங் சங்” படத்தில் லஷ்மி மேனனின் தந்தையாக நடிக்கிறார். இதில் அவர் கெட்-அப் மாற்றி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், பாகுபலி பிரபாகர் காலக்கேயா, கும்கி அஸ்வின், இயக்குனர் சி.எச்.நாராயண மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவீந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கும் இப்படத்தை முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அர்ஜுன் இயக்குகிறார். கடந்த பதினைந்து நாட்களாக கும்பகோணம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தை கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.


0 comments:

Post a Comment