அண்மைகாலமாக அரசியல் கருத்துக்களை அதிரடியாக கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறிவருகிறார்.
மேலும் தனியார் டிவி சேனல்களிலும் பேட்டியளித்து வருகிறார்.
இதனிடையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பதிலளித்து இருந்தார்.
இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்துக்களின் கலாசாரத்தை அவர் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தன.
மேலும், கமல் மீது வள்ளியூர், கும்பகோணம் கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு மட்டுமில்லை. பெங்களூருவிலும் பிரணவந்தா என்ற சாமியார் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்து கமல்ஹாசனின் இளைய மகள் பதில் அக்ஷராஹாசன் கூறியதாவது…
“என் அப்பா எதை பேச முயன்றாலும், அதுகுறித்து நிறைய யோசிப்பார். ஆழமாக சிந்திப்பார். அதன்பிறகுதான் பேசுவார்.
அவரது வாழ்க்கையில் இதுபோன்ற நிறைய சர்ச்சைகளை அவர் சந்தித்து இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
My father wont talk without thinking says Kamal daughter Aksharahassan
0 comments:
Post a Comment