Wednesday, March 29, 2017

'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'-வில் இணைந்த மாளவிகா


'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'-வில் இணைந்த மாளவிகா



29 மார்,2017 - 11:07 IST






எழுத்தின் அளவு:








'தேவி', 'இருமுகன்', 'சைத்தான்' உட்பட பல படங்களை விநியோகம் செய்த நிறுவனம் ஆரா சினிமாஸ். இவற்றில் இருமுகன் தவிர மற்ற படங்கள் எதுவும் 'ஆரா சினிமாஸ்' நிறுவனத்துக்கு பெரிய அளவில் லாபம் தரவில்லை. தற்போது இந்நிறுவனம் திரைப்பட தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறது. ஆரா சினிமாஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகவிருக்கும் படத்திற்கு 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கும் இந்தப்படத்தில் நடுநிசி நாய்கள் 'ராஜந்தந்திரம்' படங்களில் நடித்த வீரா கதாநாயகனாக நடிக்கிறார். குக்கூ மாளவிகா நாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.


0 comments:

Post a Comment