புடவை அணிய பழகும் இர்பான்
28 மார்,2017 - 14:44 IST
சிறந்த நடிப்பு திறமையால் தனக்கு என்று பாலிவுட்டில் ஒரு தனியிடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் இர்பான் கான். தற்போது இவர் ஹிந்தி மீடியம் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன், பாகிஸ்தான் நடிகை சபா ஓமரும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். சாகெத் சவுதாரி இயக்குகிறார். இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக நடிகர் இர்பான் கான் புடவை அணிய கற்றக் கொண்டு வருகிறார். ஏனோ தானோ என்று புடவை கட்டாமல், மிகவும் சரியாக, மடிப்பு கசங்காமல் புடவை கட்ட தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். ஹந்தி மீடியம்' படத்தை தினேஷ் மற்றும் பூஷண் குமார் தயாரித்து வருகிறார்கள். படம் மே மாதம் 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment