இயக்குனர் செக்ஸ் தொல்லை கொடுத்தார் : லேகா வாஷிங்டன் பரபரப்பு புகார்
25 மார்,2017 - 12:47 IST
ஆங்கில சேனல் தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர் லேகா வாஷிங்டன். காதலர் தினம், உன்னாலே உன்னாலே படங்களில் சிறு கேரக்டரில் நடித்தவர் ஜெயம்கொண்டான் படத்தில் வினய் தங்கையாக நடித்தார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்தார். கடைசியாக கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் பிரசன்னா ஜோடியாக நடித்தார்.
பாவனா கடத்தல் விவகாரத்திற்கு பிறகு நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட செக்ஸ் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது லேகா வாஷிங்டனும் சேர்ந்திருக்கிறார். பட வாய்ப்பு தருவதற்காக தமிழ் இயக்குனர் ஒருவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். மும்பையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
சினிமா நடிகையாக வாழ்வது சுலபமல்ல. பல இன்னல்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக செக்ஸ் டார்ச்சர். ஒரு தமிழ் பட இயக்குனர் அவர் படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார். உங்களுக்கு கதை சொல்கிறேன் வாருங்கள் என்ற அழைத்தார், நானும் சென்றேன். அப்போது அவர் காரில் எங்கோ செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். வாருங்கள் காரில் போய்கொண்டே கதை சொல்கிறேன் என்றார் நானும் உடன் சென்றேன்.
கதையை சொல்லி முடித்தவர் இந்த படத்தில் உங்களை நடிக்க வைக்கிறேன். பதிலுக்கு நீங்கள் எனக்கு என்ன தருவீர்கள் என்றார். அவர் கேட்பது எனக்கு புரிந்தது. என்றாலும் புரியாதது போல நடித்தேன். அவர் திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்டார். எனக்கு கோபம் வந்தது. உங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்படிப்பட்டவள் நான் இல்லை. உங்கள் பட வாய்ப்பே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு காரில் இருந்து இறங்கிச் சென்று விட்டேன். அதன் பிறகு போனில் அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார்.
இவ்வாறு லேகா வாஷிங்டன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment