Saturday, March 25, 2017

ஹீரோ இமேஜ் பற்றி கவலைப்படாத வில்லன் அர்ஜூன்!


ஹீரோ இமேஜ் பற்றி கவலைப்படாத வில்லன் அர்ஜூன்!



25 மார்,2017 - 09:33 IST






எழுத்தின் அளவு:








நாட்டுப்பற்று கொண்ட கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த வர் அர்ஜூன். குறிப்பாக, ஆக்சன் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த அவரது ஹீரோ மார்க்கெட் தற்போது மந்தமாகியிருக்கிறது. அதனால் இனிமேலும் டூயட் பாடுவது சரிப்பட்டு வராது என்று வில்லன் ரூட்டில் டிராவல் பண்ணத் தொடங்கியிருக்கிறார் அர்ஜூன்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் வில்லனாக உருவெடுத்த அவர், தற்போது விஷால் நடிக்கும் இரும்புத்திரை, சசிகுமார் நடிக்கும் கொடிவீரன் ஆகிய படங்களில் வில்லனாக நடிக்கிறார். மேலும், இதற்கு முன்பு நடித்த கடல் படத்தில் தனது ஹீரோ இமேஜ் பெரிதாக பாதித்து விடக்கூடாது என்ற கோணத்தில் கேரக்டரை செலக்ட் பண்ணி நடித்த அர்ஜூன், இனிமேல் இமேஜ் பற்றி கவலைப்படப்போவதில்லையாம். எத்தனை அதிரடியான வில்லன் வேட மென்றாலும் வரிந்து கட்ட தயாராகி விட்டாராம். அதனால் தற்போது வில்லனாக அவர் கமிட்டாகியிருக்கும் படங்களில் தன்னை முழுமையான வில்லனாக வெளிப்படுத்தப்போகிறாராம் அர்ஜூன்.


0 comments:

Post a Comment