ஆஷா சரத்தை சிபாரிசு செய்த சுகதகுமாரி டீச்சர்..!
30 மார்,2017 - 16:39 IST
வாழும் அல்லது வாழ்ந்த கதாபாத்திரங்களை குறிப்பாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை வைத்து படம் இயக்குவது என்பது மலையாள திரையுலகில் அவ்வப்போது நிகழும் நிகழ்வுதான். கோழிக்கோடு 'காஞ்சனமாலா' கேரக்டரில் பார்வதி நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்', தற்போது மறைந்த எழுத்தாளர் கமலா சுரையா என்பவர் கேரக்டரில் மஞ்சு வாரியர் நடித்துவரும் 'ஆமி' போன்றவை இதற்கு சமீபத்திய உதாரணங்கள். அந்தவகையில் நடிகை ஆஷா சரத்தும் கேரளாவில் பிரபலமான சுகதகுமாரி டீச்சர் என்பவரின் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு பவிளமல்லி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
83 வயதான சுகந்தகுமாரி டீச்சர் கேரளா முழுவதும் அறிந்த கவிஞரும், சமூகநல ஆர்வலரும் ஆவார். இவரது வாழ்கையை திரைப்படமாக்க வேண்டும் என அவரிடம் அனுமதி கேட்டு படக்குழுவினர் சென்றபோது, அதற்கு சந்தோஷத்துடன் சம்மதித்த சுகதகுமாரி டீச்சர், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தாராம். தனது கேரக்டரில் ஆஷா சரத் தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.. படக்குழுவினரின் முதல் மூன்று சாய்ஸ்களில் ஆஷா சரத்தும் ஏற்கனவே இருந்ததால் சந்தோஷமாக நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பட வேலைகளை துவக்கிவிட்டார்களாம்.
0 comments:
Post a Comment