Monday, March 27, 2017

இன்று கர்நாடக பாடகி டி.கே.பட்டம்மாள் நினைவு தினம்


இன்று கர்நாடக பாடகி டி.கே.பட்டம்மாள் நினைவு தினம்



28 மார்,2017 - 09:07 IST






எழுத்தின் அளவு:








கர்நாடக பாடகி, டி.கே.பட்டம்மாள், காஞ்சிபுரம் அருகே, தாமல் என்ற ஊரில், கிருஷ்ண சுவாமி தீட்சிதர் - காந்திமதி தம்பதிக்கு மகளாக, 1919, மார்ச், 28ல், பிறந்தார். பட்டம்மாள், முறையாக கர்நாடக இசை கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களை கேட்டே, தன் திறமையை வளர்த்து கொண்டார். சிறு வயதில், தன் தந்தை கற்றுக் கொடுத்த பக்தி பாடல்களை பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம், சிறிது காலம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களை, மேடை கச்சேரிகளிலும், திரைப்படங்களிலும் பாடினார். பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்கள், பதங்களை பாடி, தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார். சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண், இசைப்பேரறிஞர் விருது உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர், 2009 ஜூலை, 16ல், காலமானார்; அவர் பிறந்த தினம், இன்று.


0 comments:

Post a Comment