Wednesday, March 29, 2017

மூன்றாவது முறையாக இணையும் சிம்பு-ஏஆர்.ரஹ்மான்-கௌதம்


simbu gautham menon AR Rahmanவிண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் சிம்பு, கௌதம் மேனன், ஏஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்தது.


இதனை தொடர்ந்து மீண்டும் 3வது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார் கௌதம்.

இப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்தில் மலையாளத்தில் பிரித்விராஜும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும் ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர்.

இவர்களைத் அடுத்து தெலுங்கில் தேஜாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது-

இந்நிலையில் தமிழில் இப்படத்தில் சிம்பு நடிப்பார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment