கங்கைஅமரனுக்கு எதிர்ப்பு தெரிவித்த யுவன்ஷங்கர்ராஜா!
25 மார்,2017 - 09:17 IST
தனது இசையில் உருவான பாடல்களை மேடைகளில் முறையான அனுமதி பெறாமல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்பட எந்த பாடகர்களும் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. அதற்கு ஒரு சேனலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் அவரது தம்பியான கங்கை அமரன். இளையராஜாவை அவர் கடுமையாக விமர்சித்தது இளையராஜா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிலர் கங்கை அமரனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனபோதும், இளையராஜாவின் மகன்களான கார்த்திக்ராஜா, யுவன்ஷங்கர்ராஜா அவரது மகளான பவதாரிணி ஆகிய யாரும் கங்கைஅமரனின் அந்த கருத்துக்கு நேரடி எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இந்தநிலையில், சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கங்கைஅமரனை வாழ்த்தி அவரது உறவினரான வாசுகி பாஸ்கர் டுவிட் செய்துள்ளார். அதோடு, யுவன், பவதாரிணி ஆகியோரையும் டேக் செய்திருக்கிறார்.
ஆனால், அதை யுவன் சங்கர் ராஜா ஏற்கவில்லை. நான் இதை ஆதரிக்க மாட் டேன் என்று ரீட்வீட் செய்திருப்பவர், அந்த டேக்கையும் உடனடியாக நீக்கி கங்கை அமரன் மீதான தனது கோபத்தை காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment