Saturday, December 24, 2016

பிளாஷ்பேக்: போக்கிரி ராஜாவில் நடிக்க மறுத்த ரஜினி


பிளாஷ்பேக்: போக்கிரி ராஜாவில் நடிக்க மறுத்த ரஜினி



24 டிச,2016 - 11:43 IST






எழுத்தின் அளவு:








ரஜினி, ராதிகா, ஸ்ரீதேவி, முத்துராமன் நடித்து 1982ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் போக்கிரி ராஜா. ஆனால் இந்தப் படத்தில் நடிக்க ரஜினி முதலில் மறுத்தார்.

போக்கிரி ராஜா அப்போது தெலுங்கில் வெளிவந்த சுட்டாலு உன்னாத ஜாக்கிரதா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்ததும் ரஜினியை அதில் நடிக்க வைக்க முடிவு செய்தது ஏவிஎம் நிறுவனம். ஆனால் ரஜனி "அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன். நான் இப்போது ஜானி, காளி மாதிரி தரமான படங்களில் நடித்து வருகிறேன். இது மாதிரி படத்தில் நடித்தால் என் இமேஜ் போய்விடும்" என்று மறுத்தார். என்றாலும் ஏவிஎம் மிகப்பெரிய நிறுவனம் என்பதால் அவர்கள் வற்புறுத்தலுக்காக நடிக்க சம்மதித்தார்.

பஞ்சு அருணாசலம் சில மாற்றங்களை செய்து தமிழில் வசனம் எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். எடுத்த வரையில் போட்டுப் பார்த்ததில் ரஜினிக்கு படம் முழு திருப்தியாக இல்லை. தயாரிப்பாளருக்கும் திருப்தியாக இல்லை. "இந்த படம் எனக்கு செட் ஆகாதுன்னு அப்பவே நான் சொன்னேனே" என்ற வருத்தப்பட்டார். அப்போது விசுவை அழைத்து படத்தை போட்டுக் காட்டினார்கள். அவர் ராதிகாவின் கேரக்டரை இன்னும் பெரியது படுத்தவும், இன்னொரு புதிய கேரக்டரை சேர்க்கும்படியும் கூறினார். அதன்படி மாற்றம் செய்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. போக்கிரி ராஜாவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாற்றம் செய்யப்பட்ட போக்கிரி ராஜாவின் தெலுங்கு உரிமத்தை ஒரிஜினல் சுட்டாலு உன்னாத ஜாக்கிரதா தயாரிப்பாளர் வாங்கினார் என்பது இன்னுமொரு சுவாரஸ்ய தகவல்.


0 comments:

Post a Comment