லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர்
18 ஜூலை, 2017 - 15:21 IST
'அம்மணி' படத்தை தொடர்ந்து அம்மா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். அவருடன் இணைந்து அசோக் செல்வன் நடிக்கவிருக்கிறார்கள். இப்போது இந்த படத்திற்கு 'ஹவுஸ் ஓனர்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்தின் இயக்குனரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன்.
ஹிந்தி மீடியம் என்ற ஹிந்தி படத்தை ரீமேக்கை செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இயக்கும் படம் தன்னுடைய சொந்தக்கதை என்று பேசி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
'மும்பையில் ஒரு ஹிந்தி படத்தை பார்த்தேன். அந்த படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன். சில பல காரணங்களல் அது நடக்கவில்லை. ஆனால் அந்த படம் பார்த்த பிறகு எனக்கு இருந்த ஒரு உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு அழகான அன்பான இளைய தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதை நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்ல போகிறேன்.” என்று ஹவுஸ் ஓனர் படத்தைப் பற்றி இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார் லட்சுமி.
ஒரு இயக்குநரான தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ரொம்பவே மெனக்கெடுகிறார். ஆனால், அவர் இயக்கும் படங்கள் எல்லாம் கமர்ஷியலாக தோல்வியடைவதால் லட்சுமியின் லட்சியம் நிறைவேறாமலே இருக்கிறது. அதை ஹவுஸ் ஓனர் மாற்றுமா... காத்திருப்போம்...!
0 comments:
Post a Comment