Wednesday, July 19, 2017

பெண் போலீசாரின் மனசாட்சியை படமாக்கியிருக்கிறேன்: மிக மிக அவசரம் இயக்குனர் சொல்கிறார்


பெண் போலீசாரின் மனசாட்சியை படமாக்கியிருக்கிறேன்: மிக மிக அவசரம் இயக்குனர் சொல்கிறார்



19 ஜூலை, 2017 - 11:28 IST






எழுத்தின் அளவு:






Miga-Miga-avasaram-movie-to-speak-about-woman-polices-heart


அமைதிப்படை இரண்டாம் பாகம், கங்காரு படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி இப்போது மிக மிக அவசரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். இது பெண் போலீஸ் பற்றிய கதை. பெண் போலீசாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். அவர் தவிர அரீஷ்குமார், சீமான், முத்துராமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படம் பற்றி சுரேஷ் காமாட்சி கூறியதாவது:

மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும், ஆண் காவலர்களும், பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள். அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும். அடிவாங்கிய தாய்மார்களில் அடித்தவர்களின் சொந்தக்காரர்களும் இருந்திருக்கக் கூடும்.

இதில் மறுக்க முடியாத, வீதிக்கு வராத உண்மைகள் நிறைய உண்டு. பார்க்கும் வேலையைத் தக்கவைக்க துரத்தி அடித்துவிட்டு, என் உறவை அடிக்கவா காக்கிச் சட்டை போட்டேன்? என்று அன்றைய இரவு உறக்கம் தொலைத்த காவலர்களும் உண்டு. காக்கிச் சட்டையைக் கழட்டும் போது மனசையும் சேர்த்து கழட்டிப் போடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம்தான். அவர்களை அடையாளம் காண காக்கிச் சட்டை போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உறவுகளை நேசிக்கத் தெரிந்த மனிதனாக இருந்தால் மட்டும் போதும்.

காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண்மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் பேசும். அதிலும் பெண்காவலர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன் இந்த படம் உண்மையை பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள். காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்கிறேன் என்கிறார் தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ் காமாட்சி.


0 comments:

Post a Comment