Monday, July 17, 2017

எந்தன் நெங்சில் நீங்காத "வாலி" : மூன்றாம் ஆண்டு நினைவு நாள்


எந்தன் நெங்சில் நீங்காத "வாலி" : மூன்றாம் ஆண்டு நினைவு நாள்



18 ஜூலை, 2017 - 10:40 IST






எழுத்தின் அளவு:






Lyricist-Vaali-3rd-year-death-anniversary


தமிழ் சினிமாவின் வாலிப கவிஞராக வலம் வந்தவர் ரங்கராஜன் என்ற கவிஞர் வாலி. 1931-ம் ஆண்டு அக்., 29-ம் தேதி, ஸ்ரீரங்கம் அருகே, திருப்பராய் துறையில், ஸ்ரீனிவாசன் ஐயங்கார் - பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். ஓவியராக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை வந்த அவர், ஆரம்ப காலங்களில் அகில இந்திய வானொலி நிலையத்திலும், மேடை நாடகங்களிலும் பணியாற்றி வந்த வாலி, மலைக்கள்ளன் படம் மூலம், பாடலாசிரியராக அறிமுகமானார். அதன்பின்னர் வாலியின் திரைபயணம் ஆரம்பித்தது. தொடர்ந்து எம்ஜிஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித்... என நான்கு தலைமுறை கலைஞர்களுக்கு சுமார் 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார்.

பொய்க்கால் குதிரை, சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள், கையளவு மனசு என்ற, டிவி தொடரிலும் நடித்துள்ளார். கடந்த, 1973-ல், பாரத விலாஸ் படத்தில், இந்திய நாடு என் வீடு... என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். ஐந்து முறை, மாநில அரசின் விருது, 2007ல், பத்மஸ்ரீ விருதும் பெற்றார். இவர் எழுதிய, பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதை தொகுப்புகள் புகழ் பெற்றவை.

வயது மூப்பு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ஜுலை 18-ம் தேதி காலமானார். காதல் பாடல்கள், சோக பாடல்கள், தத்துவ பாடல்கள், எழுச்சி பாடல்கள்.... என பலவிதமான பாடல்களையும் எழுதியுள்ளார். இன்றோடு அவர் மறைந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கவிஞரான வாலி, அனைவரின் மனதிலும் நீங்காத வாலிப கவிஞன் என்பது நிதர்சனமான உண்மை!


0 comments:

Post a Comment