குஷ்புவின் கோபத்துக்குப் பின்னால்....
18 ஜூலை, 2017 - 15:06 IST
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் - சங்கமித்ரா. இந்தப் படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் திடீரென அந்தப் படத்திலிருந்து விலகினார். "படத்தின் முழுமையான ஸ்கிரிப்ட் எனக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே எனது முடிவுக்குக் காரணம்" என்று ஸ்ருதிஹாசன் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது.
ஸ்ருதியின் இந்த குற்றச்சாட்டை தயாரிப்பு தரப்பு மறுத்தது. சமீபத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டிகளில் கூட இது குறித்து கேட்கப்பட்டபோது சங்கமித்ரா படம் குறித்து பேச விரும்பவில்லை என்று நழுவினார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ருதிஹாசனை சாடியுள்ளார் குஷ்பு.
'சங்கமித்ரா' மாதிரியான படத்துக்கு படப்பிடிப்பு வேலை என்பது 30 சதவிதம் தான். 70 சதவீத வேலை படப்பிடிப்புக்கு முன்பே செய்யப்படுகிறது. தங்கள் குறைகளுக்கு மற்றவர்களை குறை சொல்வது ஏன்? ஒரு கௌரவமான பாரம்பரியத்தை தொடர்பவர்களிடமிருந்து இன்னும் கூட சிறுது தொழில்முறை அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.
அடங்கிப்போன ஒரு விஷயத்தை குஷ்பு மீண்டும் கிளறுவது ஏன்? தன்னுடைய கணவர் சுந்தர்.சி பற்றி பலரிடமும் லூஸ்டாக் விட்டாராம் ஸ்ருதிஹாசன். அது குஷ்பு காதுக்கு வந்ததால் இப்போது சாடியிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
0 comments:
Post a Comment