மகேஷ்பாபு படத்தில் இணைந்த அனுஷ்கா
20 ஜூலை, 2017 - 11:47 IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ஸ்பைடர் படத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, அதையடுத்து பாரத் அனி நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டல்ல சிவா இயக்கும் இந்த படம் அதிரடியான அரசியல் கதையில் உருவாகிறது. 2018 ஜனவரியில் வெளியாகும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில் அனுஷ்காவிடம் பேசினர். ஆனால் அவர் வேறு படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார்.
இருப்பினும், பாரத் அனி நேனு படத்தில் மகேஷ்பாபுவுடன் ஒரு பாடலில் நடனமாடுவதற்கு தற்போது அனுஷ்காவிடம் பேசியுள்ளனர். அதற்கு அவரும் சம்மதம் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், பாகுபலிக்குப்பிறகு பிரமாண்ட நாயகி அந்தஸ்தை பெற்று விட்ட அனுஷ்காவின் சம்பளம் எகிறி நிற்கிறதாம். அந்தவகையில், ஒரு பாடலுக்கு நடனமாடவே ரூ.2 கோடி பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment