Tuesday, July 18, 2017

மின்மினி ராட்சசன் ஆனது ஏன்?


மின்மினி ராட்சசன் ஆனது ஏன்?



18 ஜூலை, 2017 - 15:09 IST






எழுத்தின் அளவு:






Why-Minmini-movie-title-change-to-Ratchasan


விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராட்சசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் படம் இது. இப்படத்துக்கு முதலில் மின்மினி என பெயரிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மின்மினி என்ற பெயரை மாற்றிவிட்டு ராட்சசன் என பெயர் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, விஷ்ணு விஷால் பிறந்த நாளை முன்னிட்டு, வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் ராட்சசன் என்ற பெயரை உறுதிசெய்துள்ளனர்.

மரகத நாணயம் படத்தை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாகவும், அமலா பால் ஆசிரியையாகவும் நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே மின்மினி என்ற மென்மையான தலைப்பை மாற்றிவிட்டு ராட்சசன் என்ற டெரரான தலைப்பை வைத்தார்களாம்.


0 comments:

Post a Comment