Monday, July 17, 2017

தமிழ்பாட்டுக்கு இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு; ஏஆர் ரஹ்மான் ரியாக்சன் என்ன?

AR Rahman IIFA 2017திரையுலகில் தனது 25வது ஆண்டை கொண்டாடும் வகையில் லண்டனில் ஓர் இசைக் கச்சேரியை நடத்தினார் ஏஆர். ரஹ்மான்.


இதில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி பேசும் ரசிகர்கள் பங்கேற்றனர்.


ஆனால் இந்நிகழ்ச்சியில் நிறைய தமிழ் பாடல்கள் இருந்ததால் ஹிந்தி ரசிகர்கள் பாதியில் எழுந்து சென்று, தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.


இது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியது.


இந்நிலையில் ஒரு விருதுவிழாவில் கலந்துக் கொண்ட, ஏஆர். ரஹ்மானிடம் இதுகுறித்துக் கேட்டபோது…


’மக்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை.


அவர்களுக்காக கடமைப்பட்டுள்ளேன்.


என்னால் முடிந்தவரை சிறப்பான பாடல்களை தர நான் இன்னும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.


AR Rahman reaction to his Hindi fans against Tamil Songs

0 comments:

Post a Comment