Thursday, July 13, 2017

தெலுங்கு 'பிக் பாஸ்', இப்போதே எதிர்ப்பு ?


தெலுங்கு 'பிக் பாஸ்', இப்போதே எதிர்ப்பு ?



13 ஜூலை, 2017 - 15:38 IST






எழுத்தின் அளவு:






Oppose-for-Telugu-Bigboss


தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ஆரம்பமான நாள் முதலே எதிர்ப்பு இருந்து வருகிறது. நேற்று கூட ஒரு எதிர்ப்பு எழுந்து அதற்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களும், வரம்பு மீறி செயல்படுவதாக பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருகிறார்கள். அனைவரும் வெறுத்து ஒதுக்கியதால்தான் 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து பரணி தப்பிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இன்று அந்த எதிர்ப்பை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்றொரு போட்டியாளரான ஜுலி மீது ஆரம்பித்துள்ளார்கள்.

இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ள 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஜுலை 16ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக சில புரோமோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒரு புரோமோவில் ஒரு ஓட்டை வழியாக பெண்களின் காலை பார்ப்பது போன்றும், பாத்ரூம் செல்ல வரிசை கட்டி நிற்பது போன்றும் காட்சிகள் வெளியானது.

இப்போது இந்த நிகழ்ச்சிக்கு தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ராமகிருஷ்ணா, தெலுங்கு கலாச்சாரத்திற்கு எதிரான இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜுனியர் என்டிஆர் வெளியேற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர் பெண்களின் கால்களை ஒரு ஓட்டை வழியாகப் பார்ப்பது மோசமான ரசனை, ஏற்றுக் கொள்ள முடியாது என குற்றம் சாட்டியுள்ளார்.

பல நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொள்ள விரும்பவில்லை. ஜுனியர் என்டி ஆர் போன்ற வெற்றிகரமான ஒரு நடிகர், பிளாப் ஆகப் போகும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெலுங்கில் ஒளிபரப்புக்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சிக்கு, அதிலும் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தெலுங்குத் திரையுலகத்தினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


0 comments:

Post a Comment