கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு புறம் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மறுபுறம் தமிழக அரசை விமர்சித்த கமலை எதிர்த்து பல்வேறு தமிழக அமைச்சர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
“அரசை குறை கூறுவதை கமல் இத்தோடு நிறுத்திக்கொள்ளவேண்டும், அவர் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தயாரா?
அவர் நடித்த படங்களுக்கு வரி செலுத்தியது தொடர்பாக ஆய்வு செய்யட்டுமா? என அமைச்சர் வேலுமணி கேட்டு இருந்தார்.
மேலும் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய வேண்டும் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
“அரசை விமர்சித்த கமல்ஹாசனை மிரட்டுவது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்.
கமலை மிரட்டும் அமைச்சர்களை முதல்வர் வேடிக்கை பார்ப்பது அதைவிட அடாவடி செயல் எனவும் அவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
MK Stalin supports Kamals critics on TamilNadu ADMK Govt
0 comments:
Post a Comment