Tuesday, July 18, 2017

கபில் தேவ்வாக ரன்வீர் சிங்?


கபில் தேவ்வாக ரன்வீர் சிங்?



18 ஜூலை, 2017 - 16:05 IST






எழுத்தின் அளவு:






Ranveer-Singh-might-play-role-of-Kapil-Dev-in-his-Biopic


தோனி, அசார், சச்சின் ஆகியோரை தொடர்ந்து கபில் தேவ்வின் வாழ்க்கையில் சினிமாவாக உருவாக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் கபில் தேவ்வும் ஒருவர். இந்திய அணி முதன்முறையாக உலக கோப்பையை பெற்றதும் இவரது தலைமையில் தான். கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டரான கபில் தேவ்வின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். சஞ்சய் புரண் சிங் இப்படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது. இப்போது கபீர்கான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கலாம் என தெரிகிறது. சமீபத்தில் இப்படத்தின் கதையை ரன்வீரிடம் சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாகவும், அவர் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இப்படத்தை பேன்தோம் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.


0 comments:

Post a Comment