Wednesday, July 19, 2017

அக்ஷ்ய் பெயரில் போலி இணையதளம்: லட்ச கணக்கில் மோசடி


அக்ஷ்ய் பெயரில் போலி இணையதளம்: லட்ச கணக்கில் மோசடி



19 ஜூலை, 2017 - 17:22 IST






எழுத்தின் அளவு:






Scamsters-use-Akshay-Kumars-name-with-fake-account


ஹிந்தி நடிகர் அக்சய் குமார், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக அரசின் உதவியுடன் இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் நிதி வசூலித்து, ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வருகிறார்.

இதனை பயன்படுத்தி மோசடி கும்பல் ஒன்றை, அக்சய் குமாரின் இணையதளத்தை போன்றே போலி இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடை அளிக்கும்படி, நடிகரின் பெயரிலேயே போலி வங்கி கணக்கு ஒன்றையும் இணைத்துள்ளனர். இது இணையதளங்களில் வைரலாக பரவி, பலரும் பணம் அனுப்ப துவங்கி உள்ளனர்.

அக்சய் குமார் தனது இணையதளம் மூலம் வசூலித்த ரூ.1.09 கோடி நிதியை 11 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு கடந்த ஏப்ரலில் நன்கொடையாக அளித்துள்ளார். இதற்காக நடந்த விழாவில் அக்சய் குமார், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அந்த தொகையை அளித்துள்ளார்.

தனது பெயரில் பரவி வரும் போலி இணையதளத்தை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள அக்சய் குமார், மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக தான் செய்த வரும் இந்த பணியை தவறாக பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


0 comments:

Post a Comment