Sunday, July 16, 2017

வதந்தியில் சிக்கிய அகில்


வதந்தியில் சிக்கிய அகில்



16 ஜூலை, 2017 - 12:40 IST






எழுத்தின் அளவு:






Akhil-in-marriage-rumours


அகில் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் நாகார்ஜூனாவின் மகன் அகில். அதையடுத்து தற்போது சூர்யா நடித்த 24 படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், அகிலின் அண்ணனான நாக சைதன்யாவுக்கும்-சமந்தாவுக்கும் அக்டோபர் 6-ந்தேதி கோவாவில் திருமணம் நடைபெற இருப்பது தெரிந்ததே.

அதேபோல், அகிலுக்கும், ஸ்ரேயா பூபால் என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இந்த நேரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் மகளை அகில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக டோலிவுட்டில் கடந்த சில தினங்களாக பரபரப்பு செய்தி பரவியுள்ளது. இதையடுத்து, நாகார்ஜூனா தரப்பில் இருந்து இந்த செய்தியில் துளியும் உண்மையில்லை. இது ஒரு வதந்தி என்று செய்தி வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், இப்போது அகிலின் முழுக் கவனமும் விக்ரம்குமார் இயக்கும் படத்தில் மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment