குற்றவாளி பெயரில் ஆட்சி : அமைச்சருக்கு சாருஹாசன் சூடு
20 ஜூலை, 2017 - 12:20 IST
ரஜினி அரசியலுக்கு வருவாரா.... வரமாட்டாரா... என்ற விவாதம் போய், நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்க இருக்கிறாரா.... இல்லையா... என்ற விவாதம் ஆரம்பமாகிவிட்டது. தமிழக அரசு மீது கமல், ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த, அமைச்சர்களுக்கும், கமலுக்கும் கருத்து யுத்தம் ஆரம்பமானது. நேற்று கமல், நான் என்றோ அரசியலுக்கு வந்துவிட்டேன், ஊழல் குறித்த விபரங்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள்... என்று டுவிட்டரில் கேட்டு கொண்டார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் நடிகர்க கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அது தமிழக அமைச்சர்களுக்கு சூடு போடும் அறிக்கையாக உள்ளது. அதன் விபரம் வருமாறு...
"அமைச்சர் ஜெயகுமார்.... ரூ.60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்சநீதி மன்றத்தால் முடிவு செய்யப்பட்ட ஜெயலலிதா(அம்மா) பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்...?, குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால், உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம். கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள், அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.
இவ்வாறு சாருஹாசன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment