அக்ஷ்யின் மனைவியாக நடிக்கும் ராதிகா ஆப்தே
17 ஜூலை, 2017 - 17:00 IST
தமிழில் தோனி படத்தில் அறிமுகமான ராதிகா ஆப்தே, அதன்பின்னர் சில படங்களில் நடித்தாலும் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு தான் பேசப்படும் நடிகையானார். தற்போது அவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருபவர், அக்ஷ்ய் குமாருடன் பேடுமேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், அக்ஷ்ய்யின் மனைவியாக அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது... "பேடுமேன் படத்தில் அக்ஷ்ய் குமார் முக்கியமான கதாபாத்திரம். நான் அவரது மனைவியாக நடிக்கிறேன். பொதுவாக மனைவி வேடம் என்றால் படத்தில் அவர்களுக்கான ரோல் பெரிதாக இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் அக்ஷ்ய் உடன் நான் படம் முழுக்க பயணிக்கிறேன். இப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பேடுமேன் படத்தை பால்கி இயக்க, அக்ஷ்ய்யின் மனைவி டுவிங்கிள் கன்னா தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment