தயாரிப்பாளரான புலிமுருகன் வசனகர்த்தா
15 ஜூலை, 2017 - 17:18 IST
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் புலிமுருகன். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது. 'புலிமுருகன்' படத்தை தமிழில் டப்பிங் செய்தவர் ஆர்.பி.பாலா.
புலிமுருகன் படத்தில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து ஆர்.பி.ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி 'அகோரி' என்ற படத்தை தயாரிக்கிறார். டி.எஸ்.ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக சித்து நடிக்கிறார். இவருடன் பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடிக்க இருக்கிறார்கள். அகோரி படத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.பாலா இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். ஆர்.ஷரவணகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாத் கே.கே. இசை அமைக்கிறார். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படத்துவக்க விழா இன்று காலை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment