அஜீத் படங்களுக்கு வி எழுத்தில் பெயர் வைப்பதேன்? -டைரக்டர் சிவா விளக்கம்
16 ஜூலை, 2017 - 12:26 IST
அஜீத் நடித்த வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியிருப்பவர் சிறுத்தை சிவா. இதில் வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. இப்போது விவேகம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படி அஜீத்தை வைத்து சிவா இயக்கியுள்ள மூன்று படங்களின் டைட்டீலும் வி என்ற எழுத்தில்தான் ஆரம்பிக்கின்றன. அதனால் ஏதேனும் சென்டிமென்டுக்காக இப்படி செய்வதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இதுபற்றி இயக்குனர் சிவா கூறுகையில், நான் அஜீத் சாரை மனதில் கொண்டு முதலில் கதை ரெடி பண்ணுவேன். பின்னர் அந்த ஒன் லைனை அவரிடம் சொல்வேன். அவருக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் பிறகு அதை டெவலப் செய்து திரைக்கதையாக சொல்வேன். அவர் ஓகே சொன்னால் அதையடுத்து ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கி விடுவேன்.
மேலும், அந்த கதைக்கு பொருத்தமான டைட்டில்களை எழுதி அதை அஜீத் சாரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். அப்போது அவர் அதில் கதைக்கு பொருத்தமானதை ஓகே செய்வார். அப்படித்தான் இதுவரை நடந்திருக்கிறது. மற்றபடி, வி எழுத்தில் டைட்டில் வைத்திருப்பது திட்டமிட்டோ அல்லது சென்டிமென்டுக்காகவோ செய்தது அல்ல. எதேச்சையாக அமைந்ததுதான் என்கிறார் சிவா.
0 comments:
Post a Comment