Wednesday, July 19, 2017

ரஜினி-விஜய் மாஸ் அஜித்துக்கு இல்லையா? தெலுங்கு விவேகம் டிசைன் மாற்றம் ஏன்?


Ajith starring Telugu Vivekam first look posterசத்யஜோதி தயாரித்து, சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விவேகம்.


இப்படத்தின் தெலுங்கு போஸ்டர் மற்றும் டீசரை சற்றுமுன் சரியாக 12.00 மணிக்கு இன்று ஜீலை 20ஆம் தேதி வெளியிட்டனர்.

தெலுங்கிலும் இப்படத்திற்கு விவேகம் என்றே பெயரிட்டுள்ளனர்.

ஆனால் தமிழ் விவேகம் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் டிசைன்களில் அஜித் மட்டுமே அதில் இடம் பெற்றிருந்தார்.

அதற்கு முக்கிய காரணம் அஜித்துக்கு தமிழகத்தில் இருக்கும் மாஸ்தான் காரணம்.

ஆனால் தெலுங்கு விவேகம் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித்துடன் காஜல், விவேக் ஓபராய், அக்ஷராஹாசன் ஆகியோர் உள்ளனர்.

அப்படியென்றால், தெலுங்கில் அஜித்துக்கு அந்தளவு மாஸ் இல்லையா? என விவரமறிந்தவர்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில் வெளியான காலா படத்தின் அனைத்து போஸ்டரிலும் எல்லா மொழியில் ரஜினி மட்டுமே இடம் பெற்றிருந்தார்.

அதுபோல் மெர்சல் (ADIRINDHI) படத்தின் தெலுங்கு போஸ்டரில் விஜய் மட்டுமே இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith starring Telugu Vivekam first look poster

0 comments:

Post a Comment