Thursday, July 13, 2017

திலீப் இடத்தை பிடித்தார் மோகன்லாலின் நண்பர்..!


திலீப் இடத்தை பிடித்தார் மோகன்லாலின் நண்பர்..!



13 ஜூலை, 2017 - 17:16 IST






எழுத்தின் அளவு:






Antony-perumbavoor-in-Dileeps-place


சமீபத்தில் தமிழ்நாட்டில் தியேட்டர் அதிபர்கள் போராட்டம் என்கிற பெயரில் நான்கு நாட்கள் தியேட்டர்களை அடைத்து தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டினார்கள் இல்லையா..? அதேபோல கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு தொடங்கி இந்த ஜனவரி மாதம் வரை கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக கேரளாவிலும் தியேட்டர் அதிபர்கள் நடத்திய ஸ்ட்ரைக் நடத்தி மலையாள சினிமாவை ஸ்தம்பிக்க வைத்தார்கள். அதன்பின் இந்தப்பிரச்சனையில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் தலையிட்டு விசாரணை கமிஷன் அமைப்பதாக கூறிய பின்னர் தியேட்டர் அதிபர்கள் கூட்டமைப்பு ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றது..

ஆனால் இந்த ஸ்ட்ரைக் உச்சகட்டத்தில் இருக்கும்போதே, இப்போது இது முடிவுக்கு வந்தாலும் இனி எதிர்காலத்தில் தொடரக்கூடாது என யோசிக்க ஆரம்பித்த நடிகர் திலீப், அதிரடியாக புதிய சங்கம் ஒன்றை தனது தலைமையில் ஆரம்பித்தார். காரணம் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும், தியேட்டர் அதிபரும் கூட. திலீப்பின் இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணியில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மோகன்லாலின் வலதுகையாக விளங்கும் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் மம்முட்டியின் வலதுகையாக அறியப்படும் ஆண்டோ ஜோசப் என்கிற இரண்டு தயாரிப்பாளர்கள் தான்.

அவர்கள் தான் இந்த ஸ்ட்ரைக்கை விரும்பாத தியேட்டர் அதிபர்களை ஒன்றிணைத்து புதிய சங்கம் ஆரம்பமாக காரணமாக இருந்தவர்கள்.. தற்போது பாவனா விவகாரத்தில் திலீப் சிறைக்கு சென்றுவிட்டதால் அவரை திரையுலக சங்கங்கள் அனைத்தில் இருந்தும் அதிரடியாக நீக்கியுள்ளனர். அந்தவகையில் திலீப் ஆரம்பித்த இந்த திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பிலிருந்தும் திலீப் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, இந்த புதிய கூட்டமைப்பை ஆரம்பிக்க உறுதுணையாக இருந்த மோகன்லாலின் நண்பரான ஆண்டனி பெரும்பாவூர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


0 comments:

Post a Comment