Tuesday, July 18, 2017

ஆகஸ்ட் 10-ம் தேதி விவேகம் வெளியாகுமா?


ஆகஸ்ட் 10-ம் தேதி விவேகம் வெளியாகுமா?



18 ஜூலை, 2017 - 18:16 IST






எழுத்தின் அளவு:






Did-Vivegam-release-on-Aug-10


சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் செர்பியாவில் முடிந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐதராபாத்தில் அஜித் டப்பிங் பேசிக்கொண்டிருக்க, சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் பிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விவேகம் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் வெளியாக வாய்ப்பில்லை, ஆகஸ்ட் 24-ம் தேதிதான் வெளியாகும் என்ற தகவல் படத்துறையில் பரவிவருகிறது. இந்த தகவலை மறுத்துள்ள படக்குழுவினர், உறுதியாக ஆகஸ்ட் 10-ம் தேதி விவேகம் படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

கிராபிக்ஸ் பணிகளை கடந்த வருடமே தொடங்கிவிட்டதால், திட்டமிட்டப்படி பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தணிக்கைக்கு அனுப்பவுள்ளோம் என்றும் தயாரிப்பாளர் சார்பில் தெரிவித்துள்ளார்கள்.


0 comments:

Post a Comment