கிளாமருக்கு தாவிய அனுபமா பரமேஸ்வரன்..!
19 ஜூலை, 2017 - 17:45 IST
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'பிரேமம்' படம், அதில் கதாநாயகியாக அறிமுகமான மூன்று நடிகைகளுக்குமே மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது. அதை வைத்து மூவரும் அவரவர் பாணியில் தமிழ், தெலுங்கு என முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர். இதில், அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது..
இதுநாள் வரை மாடர்ன் ட்ரெஸ் அணிந்தாலும் கூட கிளாமர் இல்லாத கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் கிளாமருக்கு மாறியாக வேண்டு என்பதை புரிந்துகொண்டிருக்கிறார். அத்துடன் கிளாமர் உடை அணிந்து எடுத்த தனது புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பரவவிட்டு தான் கவர்ச்சி ரூட்டுக்கு தயார் என மறைமுக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் அனுபமா.
0 comments:
Post a Comment