என் பெயரை களங்கப்படுத்துகிறார்கள்: முமைத்கான் கோபம்
17 ஜூலை, 2017 - 12:21 IST
மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி மற்றும் கவர்ச்சி நடிகை முமைத்கான். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் கவர்ச்சி நடனம் ஆடினார். தமிழில் கந்தசாமி படத்தில் இவர் ஆடிய என் பேரு மீனாகுமாரி பாடல் இப்போதும் பிரபலம். மம்பட்டியான் இரண்டாம் பாகம் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்தார்.
தற்போது தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த 12 பேர் போதை மருந்து உட்கொண்டதாக அமலாக்கத்துறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் முமைத்கானும் ஒருவர். இவர் தெலுங்கில் தான் அதிக படங்களில் ஆடியும் உள்ளார், நடித்தும் உள்ளார். இந்த நோட்டீஸ் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு தயாரிப்பாளர் அசோக்குமார், "வட நாட்டில் இருந்து வந்த நடிகைகள் தான், இங்கு வந்து போதை மருந்தை பயன்படுத்தினார்கள்" என்று முமைத்கானை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இது முமைத்கானுக்கு கடும் கோபத்தை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
போதை மருத்து தொடர்பாக என் பெயர் மீடியாக்களில் வெளிவந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது எனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. போதை மருந்து கும்பலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர். சினிமாவில் ஆடுவதும், நடிப்பதும் என் தொழில். அதை தாண்டி எதிலும் என் கவனம் இல்லை. என்கிறார் முமைத்கான்.
0 comments:
Post a Comment