Saturday, July 15, 2017

திலீப்பிற்கு மீண்டும் ஜாமின் மறுப்பு : ஜூலை 25 வரை காவல்


திலீப்பிற்கு மீண்டும் ஜாமின் மறுப்பு : ஜூலை 25 வரை காவல்



15 ஜூலை, 2017 - 16:59 IST






எழுத்தின் அளவு:






No-bail-for-Dileep,-to-stay-in-jail-till-July-25


நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப் மூன்று தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார். திலீப்பின் ஒருநாள் போலீஸ் காவல் இன்று முடிவடைவதையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து ஜாமின் கேட்டு திலீப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் அவரை தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோர்ட்டின் இந்த உத்தரவால் திலீப்பிறகு மேலும் சிக்கல் உருவாகியிருப்பதோடு, இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பில்லை என்ற தெரிகிறது.


0 comments:

Post a Comment