ஹசீனா வேடத்திற்கு எனது முதல் சாய்ஸ் சோனாக்ஷி தான் - அபூர்வா
20 ஜூலை, 2017 - 14:30 IST
நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவின் வாழ்க்கை, பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. அபூர்வா லக்கியா இயக்க, ஹசீனா வேடத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஹசீனா வேடத்தில் நடிக்க முதலில் சோனாக்ஷியை தான் தேர்வு செய்ததாக கூறியுள்ளார் அபூர்வா.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... "ஹசீனா வேடத்திற்கு, சோனாக்ஷி தான் எனது முதல் சாய்ஸாக இருந்தது. அப்போது அவர் போர்ஸ் 2 படத்தில் நடித்து வந்தார். ஜான் ஆபிரஹாமிற்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதால் படம் முடிய தாமதம் ஏற்பட்டது. அதனால் எனது படமும் ஆரம்பிக்க தாமதமானது. ஆகையால் சோனாக்ஷியை விடுத்து எனது அடுத்த சாய்ஸான ஸ்ரத்தாவை தேர்வு செய்தேன். ஸ்ரத்தா 17 வயது பெண்ணாகவும், 45 வது பெண்ணாகவும் சிறப்பாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர்" என்று கூறியுள்ளார்.
ஹசீனா படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment