பாபுமோஷை பாண்டுகபாஸ் படக்குழுவுடன் மோதல் இல்லை : திவ்யா தத்தா
13 ஜூலை, 2017 - 13:01 IST
நவாசுதீன் சித்திக், பிதிதா பேக், திவ்யா தத்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க, "பாபுமோஷை பாண்டுகபாஸ்" என்ற படம் உருவாகி வருகிறது. குஷண் நந்தி இயக்குகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற திவ்யா தத்தா, பாதியில் சென்றுவிட்டார். படத்தில் அவருக்கான முக்கியத்துவத்தை இயக்குநர் குறைத்துவிட்டதாகவும், அதனால் தான் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ளார் திவ்யா தத்தா.
இதுகுறித்து திவ்யா தத்தா கூறியிருப்பதாவது.... பாபுமோஷை பாண்டுகபாஸ் பட டிரைலரில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பிக்க தாமதமானது, அதனால் தான் சென்றுவிட்டேன். இதுகுறித்து இயக்குநரிடம் நான் என் விளக்கத்தை கொடுத்துவிட்டேன். ஆனால் அதற்குள் எனக்கும், படக்குழுவுக்கும் பிரச்னை என்பது போன்று செய்தி வந்துவிட்டது. எங்கிருந்து இதுபோன்று செய்திகள் வருகின்றன என்று தெரியவில்லை. என்னை பற்றி அனைவருக்கும் தெரியும், இந்த மாதிரி விஷயத்திற்கு எல்லாம் நான் ஒருபோதும் அப்செட் ஆகமாட்டேன் என்று கூறியுள்ளார்.
பாபுமோஷை பாண்டுகபாஸ் படம் ஆகஸ்ட் 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment