90% லண்டன் 10% இந்தியா
15 ஜூலை, 2017 - 17:14 IST
நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த படம் '100% லவ்'. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் '100% காதல்' என்ற பெயரில் இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து, கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அவர் கேட்ட சம்பளம் ஒத்துவராததினாலோ என்னவோ நடிக்க மறுத்துவிட்டார் தமன்னா.
அதன் பிறகு லாவண்யா திரிபாதியை கமிட் பண்ணியுள்ளனர். எம்.எம்.சந்திரமௌலி இயக்கும் இந்த படத்தின் 90% காட்சிகளின் படப்பிடிப்பு லண்டனிலும் மீதமுள்ள 10% காட்சிகள் இந்தியாவிலும் நடக்கவிருக்கிறதாம். எனவே இப்படத்தின் படப்பிடிப்பை மிக விரைவில் லண்டனில் துவக்க உள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ், லாவண்யா திரிபாதியுடன் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment