தண்டுபாளையா 2: நடிகை சஞ்சனா நிர்வாண காட்சி வைரல் ஆனது
19 ஜூலை, 2017 - 12:10 IST
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்டுபாளையா என்ற கன்னப் படம் வெளிவந்து பரபரப்பு கிளப்பியது. இது காசுக்காக கொடூரமாக கொலை செய்யும் கூலிப்படையின் கதை. அதில் பெண்களும் இடம்பெற்றிருந்தது பரபரப்பானது. அந்தப் படத்தில் பூஜா காந்தி அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பு கிளப்பினார். இப்போது அதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது.
இந்தப் படத்தில் பூஜா காந்தி நடித்த கேரக்டரில் சஞ்சனா நடித்துள்ளார். படத்தின் பல வன்முறை காட்சிகளும், பாலியல் பலாத்கார காட்சிகளும், கொடூரமான சித்ரவதை காட்சிகளும் இருந்தது. இதனை தணிக்கை குழு கத்தரித்தது. குறிப்பாக போலீஸ் காவலில் சஞ்சனாவை போலீசார் நிர்வாணமாக கட்டிப்போட்டு அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த காட்சியை தணிக்கை குழு வெட்டி வீசியது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளிவந்து பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் தணிக்கை குழுவால் நீக்கப்பட்ட சஞ்சனாவின் நிர்வாண காட்சி நேற்று இணைய தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. உண்மையிலேயே சஞ்சனா, நிர்வாணமாக நடித்திருக்கிறாரா அல்லது அது கிராபிக்ஸ் காட்சியா என்று ரசிகர்கள் வியந்தனர். இது தொடர்பாக மீடியாக்கள் சஞ்சனாவை தொடர்பு கொண்டு கேட்டபோது "வெளிவந்துள்ள காட்சிகள் உண்மைதான். ஆனால் நான் முழு நிர்வாணமாக நடிக்கவில்லை" என்ற மழுப்பலாக பதில் கூறியுள்ளார். படத்தின் பரபரப்புக்காக படக்குழுவினரே இந்தக் காட்சியை வெளியிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.
0 comments:
Post a Comment