ரூபாய் படத்துக்கு ரூபாயால் பிரச்னை
12 ஜூலை, 2017 - 10:27 IST
காட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் பிரபுசாலமன் தயாரித்துள்ள படம் ரூபாய். சாட்டை படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கி உள்ளார். பிரபுசாலமனின் அறிமுகங்களான கயல் சந்திரன், ஆனந்தி நடித்துள்ளனர். அவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர்.மனோகர், மாரிமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். வி.இளைராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து இந்தப் படம் வருகிற 14ந் தேதி வெளிவருகிறது. இதுகுறித்து இயக்குனர் அன்பழகன் கூறியதாவது:
பணம் எல்லோருக்கும் அவசியம் தான். அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம். நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். இதைத் தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.
சொந்தமாக லாரி வைத்திருக்கும் கயல் சந்திரனும், நண்பர்களும், லாரிக்கு டியூ கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் மதுரையிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு ஒரு லோடு சவாரி கிடைக்கிறது. அதை கொண்டு வந்து கோயம்பேட்டில் இறக்கிவிட்டு திரும்பும்போது ஆனந்தியையும், அவரது அப்பா சின்னி ஜெயந்தையும் சந்திக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு பிரச்னை அதற்கு இவர்கள் உதவச் சென்று பெரிய சிக்லில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதை.
ஏற்கனே ரிலீஸ் தேதி அறிவிக்கபட்ட போது 500, 1000 ரூபாய் மதிப்பிழப்பு பிரச்சனையால் இந்த ரூபாய் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பல இடையூறுகளை கடந்து இம்மாதம் 14 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது. புதிதாக வந்த ரூபாய் நோட்டை மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போல் இந்த ரூபாயையும் ஏற்றுக்கொள்வார்கள் என்கிறார் அன்பழகன்.
0 comments:
Post a Comment