கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு?
14 ஜூலை, 2017 - 10:57 IST
மலையாள குணசித்திர மற்றும் வில்லன் நடிகர் கலாபவன் மணி கடந்த ஆண்டு அவரது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் விஷம் குடித்து இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை சொன்னது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். "நடிகை பாவனாக கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பும், அண்ணன் கலாபவன் மணியும் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தனர். இது தொடர்பாக இருவருக்கு தகராறு இருந்து வந்தது.
தற்போது அவர், பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால் அண்ணன் கொலையிலும் அவருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று புகார் மனுவில் கூறியிருக்கிறார். இந்த மனுமீது சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இதேபோன்று மலையாள திரைப்பட இயக்குனர் பைஜு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "கலாபவன் மணியும், திலீபும் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தனர். தொழில் தகராறு தான் அவர் மறைவுக்கு காரணம்" என்று கூறியுள்ளார். இதனால் இப்போது கலாபவன் மணி கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., இது தொடர்பாக திலீபையும் விசாரிக்கும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment