சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களை சந்தித்தபோது போர் வரும்போது அரசியல் களத்தில் சந்திப்போம் என்பது போல தன் அரசியல் வருகையை கூறி சென்றார் ரஜினிகாந்த்.
இவரைத் தொடர்ந்து ட்விட்டர் மற்றும் பிக்பாஸ் சர்ச்சைகளால், கமலும் தன் அரசியல் வருகை குறித்து சூசமாக தெரிவித்துள்ளார்.
புறப்படு தோழா, முடிவெடுத்தால் முதல்வர் என்ற தோனியில் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.
இந்நிலையில் 40 ஆண்டுகால நெருங்கிய நண்பர்களாக இருக்கும் கமலும் ரஜினியும் விரைவில் இதுகுறித்து சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் செட் அமைந்துள்ள ஸ்டுடியோவில்தான், ரஜினி நடிக்கும் ‘காலா’ பட தாராவி செட்டும் போடப்பட்டுள்ளதாம்.
எனவே படப்பிடிப்புக்காக இருவரும் அங்கே வரும்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேச வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment